குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Wednesday, July 7, 2010

மாநபிக்கு ஓர் மடல்

மாநபிக்கு ஓர் மடல்
மதீன மண்ணில் துயில் கொள்ளும் எங்கள் மஹமூதரே! தாங்கள் கண்ட தொல்லைகளும்,கொடுமைகளும்,சமுக அவலங்களும் சொல்லிமாளாது.சாயம் போன சரித்திர பக்கங்களும் தங்களின் உலர்ந்த உதிர வரலாற்றை காய்ந்திடாமல் இன்னும் வைத்திருக்கிறது
இறையாணை கொண்டு தமக்கு துன்பம் விளைவித்த கொலைகார மக்களை அழிக்க வாய்ப்பு வழங்கிய போதும் “அவர்கள் அறியாதவர்கள் ” - எனக்கூறி அம்மக்களை சபிக்காமல் நேர்வழி பட வழிந்தோடும் குருதி வாய் துடைத்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த தூயோரே! அந்த தூயோனின் இறுதி தூதே!
நாயகமே சகிப்புத் தன்மையின் தாயகமே!
படைப்பினம் அல்லாது படைத்தவனிடம் பாடம் பயின்ற பகுத்தறிவின் பெட்டகமே!
உண்மைக்கு உயிர் தந்த உத்தமரே!
மனித பிறவிகளின் மத்தியில் நீங்கலோர் மனிதநேய பிறவி!
பொறுமையே உங்கள் மீது பொறாமை கொண்டது; பொறாமையோ உங்கள் பொறுமை கண்டு அகன்று சென்றது.
வாய்மையும் தங்களிடம் வாழ்வு தேடியது,வலிமையோ வாஞ்சையுடன் துணை நின்றது
உங்கள் உருவ படத்தை அறிந்தவர் உலகில் எம்மில் இல்லை -உங்களை அறியாதவர் உலக வரைபடத்தில் எவரும் இல்லை
கலப்பின உறவு அது வெறும் கனவு என எண்ணி உறங்கிய சமுகத்தை சகோதர வீதியில் கைக்கோர்த்து சமமாய் நடக்க செய்த எங்கள் உயிரே!


உங்கள் உம்மத்தின் இந்த சமுக நிலை அறிவீரோ...?
*வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியவர் நீங்கள்
வாயே திறக்க கூடாதென வன்முறையால் கூறுபோடும் சமுகத்தில் நாங்கள்


*தீண்டாமையை திக்கற்ற திசைக்கு திருப்பியவர் நீங்கள்
யாரும் தீண்டினால் அவரை தீக்கு இரையாக்கும் தீய சமுகத்தில் நாங்கள்


*அநாதைகளுக்கும்,அமானிதங்களுக்கும் வரம்பின்றி அடைக்கலம் தந்தவர் நீங்கள்
அமானிதங்களை திரும்ப கேட்போரை வரம்பு மீறி அனாதைகளாக்கும் வஞ்சக சமுகத்தில் நாங்கள்
*வட்டியை மூர்ச்சையாக்கி வணிகத்தை வளமுடன் வாழ செய்தவர் நீங்கள்
வணிக வாயடைத்து வட்டியின் வயிறு வளர்க்கும் வழிகெட்ட சமுகத்தில் நாங்கள்


*பெண்ணினத்தை பொன்னென எண்ணி பொத்தி வைக்க சொன்னவர் நீங்கள்
பெண்ணையும்,பொன்னையும் வியாபார பொருளாக்கிய விரச சமுகத்தில் நாங்கள்
*பெருங்கல்லும் சிரம் பணிய கண்டீர் நீங்கள்
சிறுக்கல்லுக்கு சிரம் பணிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமுகத்தில் நாங்கள்


*தொண்டர்களை ஒழித்து உயிர் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர் நீங்கள்
தொண்டர்களை ஒழித்து உயிர் எடுக்கும் குண்டர்களை உருவாக்கும் கேவல சமுகத்தில் நாங்கள்


*பாவத்தின் சாயல் கூட அறியாதவர் நீங்கள் .,
பாவ முட்டைகளை பொதிகளேன சுமக்கும் கழுதை சமுகத்தில் நாங்கள்


*உங்கள் நிழல் கூட புகழ் மீது விழ மறுத்த மாமனிதர் நீங்கள்.
புகழ் தரா மக்களை நிழல் கொண்டு அழிக்கும் சமுகத்தில் நாங்கள்


*எளிமையை தோழானாக்கி,பகட்டை பரதேசியாகிய பகலவன் நீங்கள்
எளிமையை ஏளனம் செய்யும் பதவி மோக சமுகத்தில் நாங்கள்


*பெருமை -இறை ஆடை அது வேண்டாம் இங்கே நமக்கு என உரக்க கூறினீர்கள் நீங்கள்
அவ்வாடையை அகங்கார அலமாரியில் அழகாய் அடிக்கி உடுத்தி மகிழும் உதாசீன சமுகத்தில் நாங்கள்


மதீனா, மக்கள் பலரை புனிதராக்கியது மாநபி தங்களின் வருகையால் மதீன மண்ணின் புழுதி கூட புனிதமாகியது
எங்கள் இரட்சகனின் தூதர் ரவ்லாவை காண அந்த மதீன புழுதிகளோடு நானும் காத்திருகின்றேன் இறை நாடினால்...
உங்களை வர்ணிக்க வார்த்தைகள் ஏங்குகின்றன., வாய்ப்புக்கு மொழிகளும் காத்திருக்கின்றன
நான் என்ன செய்ய? அடியேனுக்கு அவ்வளவே அறிவு!
முதலோனின் இறுதித் தூதே,இறுதி நாளின் முதலாமானவரே., நீங்கள் எங்களோடு இருந்திருக்க கூடாதா...? எல்லாம் வல்லவனின் எண்ணம் தானே எல்லாமாகிறது.உங்கள் மீது சாந்தியையும்,சமாதானத்தையும் வல்ல ரஹ்மான் வாரி வழங்குவானாக! உங்களோடு சுவர்க்கத்தில் இருக்கும் நஸிபை எங்களுக்கும் நாடுவானாக!!

குறிப்பு:
எந்த ஒரு வரியும் இறைவனுக்கு இணைவைக்கும் விதத்திலோ,அவனது தன்மைக்கு சமமாகவோ வர்ணிக்கபடவில்லை,பொய்யோ,கற்பனையோ இதில் இடம் பெறவில்லை,மேலும் ஹதிஸ்களின் அடிப்படையிலேயே உருவாக்கபட்ட
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

0 comments:

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்